இந்தியாவில் கொரோனா பலி 11 ஆக அதிகரிப்பு

0 2698

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஏற்கனவே ஒருவர் கொரோனா தொற்றால் பாலியாகியிருந்த நிலையில், 2வதாக மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்க 112 ஆக அதிகரித்துள்ளது. அதற்கடுத்தபடியாக கேரளாவில் 8 வெளிநாட்டவர்கள் உட்பட 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில் 41 பேரும், உத்தரபிரதேசம், தெலங்கானாவில் தலா 35 பேரும், ராஜஸ்தானில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தூரில் இன்று மட்டும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.இதனிடையே நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் 89 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே டெல்லியில் மருத்துவர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பெரும்பாலானோர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments