சென்னையில் வீடுகளில் சுயதனிமையில் இருக்காமல் வெளியே சுற்றிய 3 பேர் மீது வழக்கு

0 7263

சென்னையில் வீடுகளில் சுயதனிமையில் இருக்காமல் வெளியே சுற்றி திரிந்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோயம்பேட்டை சேர்ந்த தந்தை, மகன் ஆகியோர் ஈராக்கில் இருந்து 22ம் தேதி திரும்பிய நிலையில், வீடுகளில் 28 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் வெளியே சுற்றி திரிந்ததாக மருத்துவ துறையிடம் இருந்து கோயம்பேடு போலீஸுக்கு புகார் வந்தது.

இதனடிப்படையில் 2 பேர் மீதும் கோயம்பேடு போலீஸார் தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சீனாவில் இருந்து திரும்பிய நிலையில் அண்ணாநகரிலுள்ள வீட்டில் தனிமையில் இருக்காமல் வெளியே சுற்றியதாக ஒருவர் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments