தமிழகம் வந்த மேலும் 6 பேருக்கு சென்னையில் கொரோனா உறுதி

0 108078

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை வரை 12 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 6 பேருக்கு சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த, போரூரை சேர்ந்த 74 வயது முதியவருக்கும், அமெரிக்காவிலிருந்து வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த, கீழ்க்கட்டளையை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments