பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம் !

0 10251

உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் மிகச் சிறப்பாக சுகாதாரப் பணிகளை செயல்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் தூண்களாக விளங்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாய தினக்கூலிகள், மீனவர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொருளாதார மீட்புக்குழு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இந்த சோதனை காலத்தில் இருந்து மீள உதவ வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments