ஏப்.15யிலும் ஐபிஎல் தொடங்குவதில் சிக்கல்

0 3951

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வரும் ஏப்ரல் 15ம் தேதியும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, கடந்த 10 நாட்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், தற்போது தன்னால் எதுவும் கூற முடியாது என தெரிவித்தார். மேற்குவங்க அரசு கேட்டுக்கொண்டால் ஈடன் கார்டன் மைதானத்திலுள்ள வீரர்கள் தங்கும் அறை, உட்புற வசதிகள் ஆகியவை மருத்துவ தேவைக்காக வழங்கப்படும் எனவும் கங்குலி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments