பட்டினப்பாக்கத்தில் மெரினா வணிக நகரம் கட்ட நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

0 533

சென்னைக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் வகையில், பட்டினப்பாக்கத்தில், மெரினா வணிக நகரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பிரதான இடமான பீட்டர்ஸ் காலனியில், 3.84 ஏக்கர் பரப்பில் சுமார் 487 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னடுக்கு மாடிகளைக்கொண்ட அலுவலக மற்றும் வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார். அரும்பாக்கத்தில் 7.14 ஏக்கர் பரப்பளவில், 304 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் உள்ளடங்கிய பன்னடுக்குமாடி கட்டடத்தினை 697 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

நந்தனத்தில், நிதி நகரம் மற்றும் பன்னாட்டு நிதி மையம் ஆகியவற்றிக்கான தமிழ்நாடு வர்த்தக மையம் ஒன்றை உருவாக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments