கொலையில் முடிந்த கொரோனா தொடர்பான டீக்கடை விவாதம்

0 22251

நீலகிரி மாவட்டம் உதகையில் கொரோனா குறித்த டீக்கடை விவாதம் மோதலாகி கொலையில் முடிந்திருக்கிறது. உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர், மார்க்கெட் பகுதியிலுள்ள டீக்கடையில் நின்று கொரோனா குறித்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தேவதாஸ் என்ற நபர், “கொரோனா” தொற்றிக்கொள்ளும் தள்ளி நின்று பேசுங்கள் என ஜோதிமணியிடம் கூறவே, அதனை அவமானமாகக் கருதிய ஜோதிமணி, அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைலப்பாகி, அங்கு வாழைக்காய் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து தேவதாஸ் ஜோதிமணியை குத்தியதாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தேவதாசை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments