மும்பையில் பதுக்கப்பட்டிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான மாஸ்க்குகள் பறிமுதல்

0 3919

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் மாஸ்க்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் சூழலில், பல்வேறு பகுதிகளிலும் மாஸ்க்குகள், சானிடைசர்கள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதிகம் பாதிப்புகளை சந்தித்து வரும் மகாராஷ்டிராவிலும் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை விமான நிலையம் அருகே சாஹர் பகுதியிலுள்ள குடோன்களில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாஸ்க்குகளை பறிமுதல் செய்தனர்.

3.25 லட்சம் N-95 மாஸ்க்குகள் உட்பட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 25 லட்சம் மாஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments