கொரோனா சோதனைகள் - மருத்துவ நிபுணர்கள் கவலை..!

0 70693

கொரோனாவை கண்டுபிடிக்கும் சோதனைகள் தேவையான வேகத்திலும், ரேண்டம் அடிப்படையிலும் நடக்கவில்லை என பல வைராலஜி மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா மிகவும் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் நன்கு வரையறுக்கப்பட்ட, விரைவான பரிசோதனைகள் மிகவும் அவசியம் என அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இதற்கு தென்கொரியா சிறந்த உதாரணமாக கூறப்படுகிறது. அங்கு கொரோனா தொற்று பரவியதாக தகவல் கிடைத்த உடன் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக மாதிரிகள் உடனடியாக சேகரிக்கப்பட்டு, ஆய்வக முடிவுகள் அடுத்த தினமே வெளியிடப்பட்டதால்,தொற்றின் வேகத்தை விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த நடைமுறை இந்தியாவிலும் வந்தால் கொரோனா தொற்றை திட்டமிட்டு கட்டுப்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments