பூந்தமல்லியில் சாவகாசமாக சுற்றித் திரிந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேர்

0 1340

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேர், சாவகாசமாக சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பார்த்த பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் பூந்தமல்லி தாசில்தார், சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில் கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும், கடந்த மாதம் பிரான்ஸ் சென்று திரும்பியதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. உணவு பொருட்கள் தீர்ந்து போனதால் அவற்றை வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை பரிசோதித்த சுகாதார துறை அதிகாரிகள் மீண்டும் வீட்டில் தனிமைப்படுத்த அழைத்து சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments