120 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருக்கிறோம் - விஜயபாஸ்கர்

0 1999

கொரோனா அறிகுறிகளுடன் இருந்த 120 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 743 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 608 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதில் குணமடைந்து வீடு திரும்பிய ஒருவர் போக 14 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 163 பயணிகளுக்கு அறிகுறிகள் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு, 15 ஆயிரத்து 298 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 116 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் மொத்தம் 15 ஆயிரத்து 298 படுக்கைகள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments