செய்யாறில் மருந்தியல் தொழிற்பூங்கா.. பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு

0 884

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் மருந்தியல் தொழிற்பூங்கா, சிப்காட் நிறுவனத்தால் 770 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலைமாவட்டம், செய்யாறு தொழிற் பூங்காவில், முதற்கட்டமாக சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவ மூலப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏதுவாக மருந்தியல் தொழிற்பூங்கா, சிப்காட் நிறுவனத்தால் 770 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மருந்து உற்பத்திக்கு தேவையான அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் குறிப்பாக, கழிவு நீர் சுத்திகரிப்புஆலை, மூலப்பொருட்கள்சேகரிப்புநிலையம், உலர் மற்றும் குளிரூட்டு நிலையம், நவீனஆய்வகவசதிகள், கிடங்குகள், அவசரகாலநடவடிக்கைமையம் உட்படஅனைத்துவசதிகளும் உள்ளடக்கியதாகஇப்பூங்கா இருக்கும்.

தூத்துக்குடிமாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள, வீரபாண்டிய கட்டபொம்மன் தளபதி வெள்ளையத் தேவன் மணிமண்டபத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முழுவுருவவெண்கலச் சிலைஅமைக்கப்படும். பத்திகையாளர் நலநிதியத்தில் இருந்து வழங்கப்படும் மருத்துவ நிதி உதவி 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநில அளவிலான தனிமைபடுத்தப்பட்ட மருத்துவமனைகள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் சுகாதாரத்துறை சார்ந்த புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். 

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடி சிகிச்சை மேற்கொள்ள துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வான்வழி அவசர காலசேவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments