கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சிறப்பு ஊதியம்

0 2621

கொரோனா தொடர்பான சிகிச்சை பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளில் அர்ப்பணிப்போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள்,
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதற்கு துணையாக செயல்படுகின்ற பிற துறைகளின் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, உறுப்பினர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments