வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு

0 8003

2018-19 நிதியாண்டின் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்பான கெடு மார்ச் 31 ல் இருந்து ஜூன் 30 க்கு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற அவர், எந்த வங்கியிலும் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பதற்கான சலுகைத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி கணக்கை ஜூன் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தல் போதுமானது என்ற அவர், ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு உதவும் வகையில் ஜூன் 30 வரை சுங்க தடையில்லா சான்றிதழ் சேவை 24 மணி நேரமும் வழங்கப்படும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments