தமிழகம் வந்த மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

0 7624

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை 12 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 3 பேருக்கு சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த, போரூரை சேர்ந்த 74 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல, அமெரிக்காவிலிருந்து வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்மணியும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல, சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த, கீழ்க்கட்டளையை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 3 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

#coronaupdate:Chennai reports 3 new cases for #COVID19. All 3 travelled abroad.74 Y M return from USA at #Stanley,52 Y F return from USA at #Stanley,25 Y F return from Swiss at #KMC,.They are residents of Porur, Purasaivakkam, Keelkattalai rsptvly.Pts in isolation & stable. #CVB

— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments