அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 10000 பேருக்கு கொரோனா தொற்று

0 2671

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.

அதே போன்று ஒரே நாளில் 139 பேர் அதற்குப் பலியாகி, உயிரிழப்பு 550 ஐ தாண்டியுள்ளது.அமெரிக்காவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருவதை அடுத்து அத்தியாவசிய மருந்துகள், மாஸ்குகள், சானிடைசர்கள் உள்ளிட்டவை பதுக்கப்படுவதை தடுப்பதற்கான சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கொரோனாவுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி குளோரோகுயின் மாத்திரைகளை சாப்பிட்ட 60 வயதான தம்பதியரில் கணவர் உயிரிழந்தார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவுக்கு குளோரோகுயின் மாத்திரைகள் பலனளிப்பதாக அதிபர் டிரம்ப் கூறினாலும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா மரணங்கள் 6 ஆயிரத்து 77 ஆகவும், தொற்று எண்ணிக்கை 63 ஆயிரத்து 927 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எட எச்சரித்துள்ள பிரதமர் ஜியுசெப்பே கோன்டே (Giuseppe Conte) இத்தாலியில் உள்நாட்டு போக்குவரத்தை முழுமையாக தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments