மேற்குவங்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸ் தடியடி

0 1703

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வந்தோரை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநில அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும் கூச் பெகாரில் (Cooch Behar) இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளிலும் விதியை மீறி சிலர் வந்தனர். இதைகண்ட போலீஸார், அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இதேபோல் ஆட்டோவில் வந்தோரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பினர். சைக்கிளில் ரிக்சாவை இயக்கியோரை எச்சரிக்கும் வகையில், அதன் டயர்களில் இருக்கும் காற்றை திறந்துவிட்டு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments