நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

0 4752

கொரோனா தொடர்பாக, பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

கொரோனா தொடர்பாக, கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், ஒரு நாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இது நமது முயற்சி, சுய கட்டுப்பாட்டின் அடையாளமாகவும், நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றுவதாகவும் அமையும் என அவர் தெரிவித்தார்.

இந்த மக்கள் ஊரடங்கின் வெற்றி மற்றும் அதிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவம், எதிர்கால சவால்களுக்கு நம்மை தயார்படுத்த உதவும் என்றும் மோடி கூறியிருந்தார். சுய ஊரடங்கு நமக்கும் நமது தேசத்திற்கும் அக்னி பரீட்சை என்றும், கொரோனாவை எதிர்த்து போராட இந்தியா எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதை கண்டறிவதற்கு உதவும் என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, கடந்த 22ஆம் தேதி ஊரடங்கு நாடு முழுவதும் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் மறுநாளே நிலைமையின் தீவிரம் தெரியாமல் பல பகுதிகளில் மக்கள் நடந்துகொள்கிறார்கள் என அவர் நேற்று வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். கொரோனா பாதிப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக உரையாற்ற உள்ளதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் மேலும் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments