கொரோனாவை எதிர்த்து போரிடும் பேராற்றல் இந்தியாவுக்கு உள்ளது - உலக சுகாதார நிறுவனம்

0 7805

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போரிடும் பேராற்றல் இந்தியாவுக்கு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான் ((Michael J Ryan)) செய்தியாளர்களை சந்தித்தார். அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் நெருக்கமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவும் ஆபத்து அதிகம் என அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்தியா மிகுந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்றபோதிலும், பெரியம்மை, போலியோ ஆகிய இருபெரும் தொற்று நோய்களை வேரோடு அழித்து உலகுக்கே முன்னோடியாக உள்ளது என மைக்கேல் ரியான் கூறினார். எனவே, இந்தியா கொரோனாவுக்கு எதிராகவும் போரிட பெரும் ஆற்றல் கொண்டது என்றும், இந்தியா போன்ற நாடுகள் இந்த முறையும் உலகுக்கே வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments