சமூக விலகியிருத்தலால் 62-89 சதவீதம் தொற்றை குறைக்கலாம் - ICMR

0 1671

சமூக விலகியிருத்தலை கட்டுப்பாடுடன் கடைப்பிடித்தால் கொரொனா பரவுவதை 62 முதல் 89 சதவிகிதம் வரை தடுத்து விடலாம் என ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் இருந்து  அது மற்றவர்களிடம்  பரவ 3 நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை  எடுத்துக் கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே சமூக விலகியிருத்தலை உறுதி செய்வதுடன், அறிகுறி உள்ளவர்கள் அல்லது சந்தேகத்திற்கு இடமானவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் தொற்று பரவலை கணிசமாக குறைத்து விடலாம் என ICMR தெரிவித்துள்ளது.

அதே சமயம்  கொரோனா பரவும் வேகம் குறித்து முழுமையான தகவல்கள் கிடைத்தால்,  எந்த அளவுக்கு பரவல் விகிதம் குறையும் என்பதை மேலும் துல்லியமாக கணிக்க முடியும் எனவும் ICMR  தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments