கொரோனா கும்மிப்பாட்டு..! நம்ம போலீஸ் கெத்துப்பா..!

0 10502

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல்துறையினர் கும்மி அடித்தும், தீயணைப்புதுறையினர் குத்தாட்டம் ஆடியும் கைகழுவுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

கேரளா போலீசார் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக தங்கள் பாணியில் கைகழுவுதலின் அவசியத்தை வீடியோவாக பரப்பினர்.

பஞ்சாப் காவல்துறையினரும் தங்கள் பாரம்பரியப்படி விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழக காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண் போலீசார் கும்மிப்பாட்டு வடிவில் கொரோனா விழிப்புணர்வை கொண்டு சேர்த்து வருகின்றனர்.

முககவசத்துடன் கும்பியடித்து ஆடிக்கொண்டே கைகழுவுதலின் மகத்துவத்தை பாடலாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

அதே போல புதுக்கோட்டை தீயணைப்புத்துறையினர் சாலைசந்திப்புகளில் சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முககவசத்துடன் குத்தாட்டம் ஆடி கைகழுவுதல் அவசியம் என்பதை சுட்டிக்காட்டினர்.

தமிழகத்தில் ஆடலுடன் பாடலாக சொன்னால் எந்த ஒரு விழிப்புணர்வும் வேகமாக சென்றடையும் என்பதால் காவல்துறையும் , தீயணைப்புத்துறையினரும் இந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments