கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிப்பு?

0 58059

கொரோனா தொற்றுநோயை உருவாக்கும் வைரசை கொல்லும் மருந்தையும், தடுப்பு ஊசிக்கான மருந்தையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடில்லா ஹெல்த்கேர் (Zydus Cadila Healthcare) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது.

மறுசீரமைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பூசியை உருவாக்கும் வகையில், வைரசுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய ஆன்டிஜென் ஒன்றிற்கான டி.என்.ஏ பகுப்பாய்வு குறியீடுகளை, ஒரு பாக்டீரியா அல்லது பாலூட்டிகளின் செல்களில் உட்புகுத்தி, ஆய்வுகள் செய்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தியுள்ள, ஜைடஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவன தலைவர் பங்கஜ் பட்டேல், இரு வகையான தடுப்பூசி மருந்துகளை, இருவேறு டிஎன்ஏ தொழில்நுட்பகளின் அடிப்படையில் தயாரித்து, விலங்குகளின் உட்செலுத்தி கண்காணித்து வருவதாகவும், அதன் முடிவுகள் தெரியவர நான்கு முதல் ஆறு வார காலங்கள் நமக்குத் தேவை என்றும், தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments