ஏர் இந்தியா பணியாளர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

0 4039

கொரோனாவுக்கு எதிரான போரில் ஏர் இந்தியா பணியாளர்கள் காட்டும் மன உறுதியைக் கண்டு பெருமைப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனா, ஜப்பான், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு வருவதில் ஏர் இந்தியா பணியாளர்கள் அச்சமின்றித் தந்நலமின்றிப் பணியாற்றினர்.

தனது பணியாளர்களைப் பொதுமக்களும், அரசுத் துறையினரும் கண்ணியமாகவும் மதிப்புடனும் நடத்த வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஏர் இந்தியா பணியாளர்களின் துணிச்சலைக் கண்டு தான் பெருமைப்படுவதாகப் பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அருமுயற்சிகள் நாட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments