கொரோனா பரவல் எதிரொலி.. பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி..!

0 2617

கொரோனா அச்சுறுத்தலின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவியதில் இருந்தே அதன் தாக்கம் வணிகம், தொழில்துறைகளில் எதிரொலித்தது. இதனால் பெட்ரோலியம் விலை வீழ்ச்சியடைந்ததுடன், உலக அளவில் பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தியப் பங்குச்சந்தைகளும் 4 வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

வணிகநேர முடிவில் சரிவு மேலும் அதிகரித்து சென்செக்ஸ் மூவாயிரத்து 935 புள்ளிகள் சரிந்து 25 ஆயிரத்து 981 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி ஆயிரத்து 135 புள்ளிகள் சரிந்து ஏழாயிரத்து 610 ஆக இருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகிவற்றின் பங்கு விலை 20 விழுக்காடு முதல் 27 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 4 மணியளவில் ஒரு ரூபாய் 6 காசுகள் சரிந்து 76 ரூபாய் 26 காசுகளாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments