திருப்பூரிலுள்ள தொழில் நிறுவனங்கள் 31ம் தேதி வரை அடைக்கப்படும்

0 1473

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வரும் 31ம் தேதி வரை திருப்பூரிலுள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழில் துறையினருடன் அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், தொழிலாளர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் வரும் 31ம் தேதி வரை அடைக்கப்படும் என்றார்.

அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை விடுதியிலேயே தங்க வைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments