'தனிமைப்படுத்துதலை' பொதுமக்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 8957

'தனிமைப்படுத்துதலை' பொதுமக்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் தமது அறிக்கையில் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments