விமான பயணிகளுக்கு கொரோனா இருப்பதாக எழுந்த சந்தேகத்தால் ஜன்னல் வழியாக குதித்து ஓடிய விமானி

0 81683

விமான பயணிகளுக்கு கொரோனா உள்ளதாக சந்தேகம் எழுந்ததால், விமானத்தை ஓட்டிவந்த விமானி, ஜன்னல் வழியாக வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.

புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில், முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு கொரோனா  உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து விமானம் தரையிறங்கியபோது, அதில் பயணித்த பயணிகள் அனைவரும் பின்புற வாசல் வழியாக பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொரோனா அச்சம் காரணமாக முன் வாசல் வழியாக இறங்காத விமானி, விமானத்தின் முன்புற ஜன்னல் வழியாக வெளியேறினார். பின்னர் நடந்த பரிசோதனையில் விமானத்தில் பயணித்த யாருக்குமே கொரோனா இல்லை என்பது கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments