வீட்டை விட்டு வெளியே சென்றால் பாஸ்போர்ட் முடக்கம்... சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிப்பு

0 4923

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள், வீட்டை விட்டு வெளியே சென்றால் பாஸ்போர்ட் முடக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னையில் அத்தகைய நபர்கள் உள்ள 3 ஆயிரம் வீடுகள் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிக்கப்படுகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், அவரவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை காவல்துறை முழுமையாக கண்காணிக்கும். இந்த உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியில் சென்றால் காவல்துறை மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரவை மீறுபவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.  வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஏற்கெனவே 3 ஆயிரம் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடு சென்று விட்டு தமிழகம் திரும்பியவர்களில், தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட 9 ஆயிரத்து 424பேரின் இல்லங்களில் இன்று மாலைக்குள் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments