சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

0 9863

கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியாக, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் ஊழியர்களை உத்தரவிட்டுள்ளன. சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் பொதுஇடங்களில் கூடுவதைத் தவிர்த்து மக்கள் வீட்டினுள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து தங்களது சொந்து ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. மேலும், பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும் அனைவருக்கும் நுழைவுவாயிலேயே காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே, பயணிகள் எண்ணிக்கையை பொறுத்தே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments