கொரோனா தடுப்பு - ரூ.500 கோடி ஒதுக்கீடு

0 2327

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசின் அறிவுரைகளை, அரசு மற்றும் தனியார் துறையினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கத் தடையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

கொரோனாவினால் ஒரு உயிர் கூட போக அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்த முதலமைச்சர், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இதற்காக, ஏற்கெனவே 60 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்த நிலையில், தற்போது 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments