கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் முடிகிறது

0 566

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவடைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடப்பு கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் எவ்வாறு இடைவெளி விட்டு அமர முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரை முன்னரே முடிக்க வேண்டும் என்று சில கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments