கொலைகார கொரோனாவால் இத்தாலியில் இழப்பு அதிகரிப்பு

0 4918

கொலைகார கொரோனாவின் மையப்புள்ளியான இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 650க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதனால் கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விஷக்கிருமியின் தொற்று அங்கு கட்டுக்குள் வந்துவிட ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனாவின் கொத்தான பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

அங்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 5 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அங்கு 5 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 650க்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ளது அந்த நாட்டினரையும், உலக மக்களை அதிர்ச்சிக்கும் அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது. 

இத்தாலிக்கு அடுத்தபடியாக மற்றெரரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்கனவே ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழந்திருந்த நிலையில் நேற்று மட்டும் 375 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் இருந்து வந்தன. இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இருந்து வந்தது.

இந்நிலையில், ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 375 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையின்மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 3-வது இடத்தில் உள்ளது.

இந்த நாடுகளைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ஈரானில் 129 பேரும், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தலா 112 பேரும் கொலைகார கொரோனாவினால் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments