சீனாவின் வெற்றி நம்பிக்கையளிப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு

0 3584

கொரோனா வைரசில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை உலக நாடுகளுக்கு சீனா செயல்படுத்திக் காட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வெற்றி உலகிற்கே ஒரு பாடமாக இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அடானோம் ( Tedros adhanom) தெரிவித்துள்ளார். கடந்த நான்கு நாட்களில் சீனாவில் ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

வூகானில் தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் இந்த முன்னேற்றம் உலகிற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சீனா உண்மைகளை மறைத்து கூறும் தகவல்களை நம்பக்கூடாது என்று சிலர் கூறி வந்தாலும் உலக சுகாதார அமைப்பு இதை ஒரு நம்பிக்கையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

சுமார் ஒருகோடி பேரை தனிமைப்படுத்தியும்  5 கோடி மக்களை வீட்டில் இருக்கும்படியும் செய்த சீன அரசு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்பறுத்தல் பலன் தரும் என்பதை நிரூபித்துள்ளது. 

வூகானில் இரண்டு வார காலம் முழு அடைப்பு காரணமாக அதன் பாதிப்புகள் குறையத் தொடங்கியதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 42 ஆயிரம் மருத்துவர்கள் சிகிச்சைக்காக வூகானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments