கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

0 3044

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளியூர்களில் இருந்து நள்ளிரவில் காய்கறிகள் வழக்கம்போல் வந்திறங்கின.

பொதுமக்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும்  பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வியாபாரிகள் வழக்கம் போல் தங்களின் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக அதிகாலையிலேயே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர்.

நேற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட கோயம்பேடு சந்தை இன்று அதிகாலையில் மீண்டும் வியாபாரிகளின்  நடமாட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments