ஒலித்தது கரவொலி ; குலுங்கியது தேசம்...!

0 8659

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் - நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்கள் ஊரடங்கின்போது மாலையில் கையொலி எழுப்புமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

 அதனை ஏற்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா, தனது குடும்பத்தினருடன் இணைந்து இசை ஒலியுடன் கைதட்டி, மருத்துவ குழுவினருக்கு நன்றியை பதிவு செய்தார்.

டெல்லியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது இல்லத்தில் கை தட்டி நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங்கின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தனது டெல்லி இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து, கரவொலி - இசை முழக்கம் எழுப்பினார்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜமா மசூதிக்கு வெளியே கூடிய இஸ்லாமிய மக்கள், கரவொலி எழுப்பி, கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள
மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

லக்னோவில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கரவொலி எழுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்று, மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

 நொய்டாவில், பிரமாண்ட அடுக்கு மாடி குடியிருப்பின் பால்கனி, மொட்டை மாடிகளில் நின்று, கரவொலி எழுப்பியும் மணி ஒலித்தும் தங்கள் நன்றிகளை மக்கள் பதிவு செய்தனர்.

 மும்பை, ஐதராபாத் மற்றும் பஞ்சாப் என நாடு முழுவதும் மக்கள் வீதிகளிலும், தங்கள் இல்லங்களிலும் கூடி, கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் - நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மணி ஓசையுடன் கரவொலி எழுப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments