மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து சேவைகள் நிறுத்தம்

0 7516

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நகரப்பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாநகர பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட சூழலில் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து  கழகம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதேநேரம், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது. அதேபோல, வெளி மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை, தமிழகத்திற்குள் வருகிற 31 ம் தேதி வரை அனுமதிக்கப்பட மாட்டாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments