75 மாவட்டங்களுக்கு சீல் - மத்திய அரசு முடிவு

0 5218

நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள 75 மாவட்டங்களை  தனிமைப்படுத்தி சீல் வைக்க மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன.

அதே போன்று வரும் 31 ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த அறிவிப்பு வெளியான உடன், கொரோனா தொற்று உறுதியான இந்த 75 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர இதர சேவைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான  தடை உடனடியாக  அமலுக்கு வரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments