அரசுக்கு துணை நிற்குமாறு, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

0 5942

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு துணை நிற்குமாறு, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணொலி மூலம் சென்னையில் இருந்து பல்வேறு தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். தனியார் மருத்துவமனைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிய அமைச்சர், எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில், கூடுதல் படுக்கை வசதி, மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தேவை இருப்பின் ஓய்வு பெற்ற டாக்டர்களையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments