கொரோனா பாதிப்பில் கடந்த 2 நாட்களில் 40 சதவீதம் பாதிப்பு !

0 3108

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதம், கடந்த 2 நாட்களில் மட்டும் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மட்டும் கேரளாவில் 12 பேர், மகாராஷ்டிராவில் 11 பேர், பஞ்சாபில் 10 பேர் என 78 பேர் பாதிப்புள்ளாகினர்.

கடந்த ஜனவரி 30ல் முதல் நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதிலிருந்து இதுவே அதிகபட்சமாக கருதப்படும் நிலையில், மொத்த பாதிப்புகளில் 40 சதவீதம் கடந்த 2 நாட்களில் மட்டும் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா, பஞ்சாப், குஜராத்  ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments