அரசுக்கு ஒத்துழைப்போம்... கூட்டம் தவிர்ப்போம்...!

0 1897

இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை மீறி, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும் சொந்த ஊர்களுக்கு செல்லவும், நேற்று தமிழகத்தின் பல பகுதிகளின் பொதுமக்கள் குவிந்த காட்சிகளை காண முடிந்துள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் மீன்கள் வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் குவிந்தனர். வரத்து குறைவாக இருந்ததால் மீன்கள் சீக்கிரமாக விற்று தீர்ந்ததால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

காஞ்சிபுரத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தை, பல்பொருள் அங்காடி மற்றும் மருந்தகங்களிலும் அதிகளவில் காணப்பட்டனர்.

அரசு பேருந்துகள் ரத்தானதால் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய வசதிகள் இல்லாததால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் டோல்கேட்டின் நின்றிருந்த ஏராளமானோர் அவ்வழியாக சென்ற லாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் ஏறி சென்றனர்.

வேலூரில் இறைச்சி அங்காடியில் குவிந்த பொதுமக்கள் கோழிக்கறியை தவிர்த்து மீன், ஆடு போன்ற இறைச்சிகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

திண்டிவனத்திலும், அத்தியாவசிய உணவு பொருட்களான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் குவிந்ததால், நகரின் முக்கிய வீதியான நேரு வீதி மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.

இதேபோன்று திருப்பூர், புதுக்கோட்டை போன்ற பல பகுதிகளின் சந்தைகளிலும், கடை வீதிகளிலும் பொதுமக்கள் அதிகளவில் காணப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments