3 வாரங்களுக்கு ஊரடங்கு: அன்புமணி கோரிக்கை..!

0 11896

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பாமக இளைஞர் அணித் தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

பாமக இளைஞர் அணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சென்னையில் பேசும்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இத்தாலி, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து நாம் பாடம் கற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.

சீனாவிலும், அமெரிக்காவிலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் மிகக் கடுமையாக பின்பற்றியதால் பெருமளவு பாதிப்பு அங்கு தடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், மெத்தனமாக இருந்த காரணத்தால் இத்தாலியில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.

சென்னையில் இன்னும் எந்தவித பதற்றமும் இல்லாமல் மக்கள் வீதிகளில் நடமாடுவதையும், கடைகளில் பொருட்கள் வாங்குவதை பார்க்கமுடிவதாகக் கூறிய அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு உடனடியாக மகாராஷ்டிரம் போன்று கடுமையான எச்சரிக்கைகளைக் கொடுத்து மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று கூறிய அன்புமணி, வைரஸ் பாதிப்பு இங்கு தீவிரமடைந்தால். சீனாவை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். எனவே முன்கூட்டியே மக்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய தருணம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments