தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை..!

0 8230

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பொழிந்தது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த மழையால் அங்கு வெப்பம் குறைந்துள்ளது. 

சேலம் சூரமங்கலம் பகுதியிலும் திடீரென சாரல் மழை பெய்தது. ஜங்ஷன் ரயில் நிலையம், புது ரோடு. ஏ.வி.ஆர். ரவுண்டானா போன்ற பகுதிகளில் சுமார் இருபது நிமிடம் இந்த சாரல் மழை நீடித்தது. 

மதுரையில் மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல் போன்ற பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த மழையால் ரோட்டில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. 

இதே போன்று திருப்பத்தூர் மாவட்டத்திலும் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், சில நிமிடங்கள் பெய்த லேசான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments