பூட்டிய கோவிலுக்குள் குதூகலமான குருக்கள்..! டிக்டாக் வைரஸ் அட்டூழியம்

0 6027

நாடே கொரோனா பீதியில் உறைந்து கிடக்க பூட்டிய கோவிலுக்குள் டிக்டாக்கில் குதூகலமாக ஆட்டம்போட்ட சீனியர் குருக்கள் ஒருவரின் வீடியோ வைரஸ் போல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டாலும், கோவிலில் தினமும் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அப்படி பூட்டப்பட்ட கோவில் ஒன்றுக்குள் நின்று சீனியர் குருக்கள் ஒருவர் டிக்டாக்கில் அந்த கால ஐட்டம் டான்சர் அனுராதாவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக போட்ட ஆட்டம் தான் தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரஸை விட வேகமாக பரவிவருகிறது..!

அத்தோடு நிற்கவில்லை கோவிலுக்குள் மணியை வைத்து சீனியரும் ஜூனியரும் சேர்ந்து போட்ட பழைய ஆட்டமும் வீடியோவாக அம்பலத்திற்கு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு கோவில் பிரகாரத்தில் சீனியர் குருக்களை பிடித்து ஜூனியர் குருக்கள் அசந்து போயி டூயட் பாடியது எல்லாம் பெண் பக்தர் ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்தது.

ஜூனியர் குருக்கள் மப்டியில் இருந்தா கூட நண்பர்களுடன் சேர்ந்து ரொம்ப குதுகலமாக வீடியோ போடுவார் என்பதற்கு இந்த டிக்டாக் வீடியோ சாட்சியானது.

சீனியர் குருக்களின் டிக்டாக் திருவிளையாடல்கள் வெளிச்சத்திற்கு வந்ததுமே, கிரிமினல் போல சிந்தித்த ஜூனியர் குருக்கள் டிக்டாக்கில் இருந்து தங்களது மொத்த வீடியோக்களையும், தனது ஐடியையும் அடியோடு நீக்கியதாக கூறப்படுகின்றது.

பாவம், சீனியர் குருக்களின் போதாத காலம், அவரது ஆட்டத்தை பார்த்து சொக்கி போன ரசிகர் ஒருவர் குருக்களுடன், சேர்ந்து வாத்தியாரை வரவழைக்க... டூயட் போட்டதால் அந்த வீடியோவுடன் சிக்கிக் கொண்டது இந்த குருக்கள் குரூப்ஸ்..! 

பக்தர்கள் இல்லாத கோவிலுக்குள் என்னவெல்லாம் செய்வோம் என்று டிக்டாக் மூலம் செய்முறை விளக்கம் தந்த இரு குருக்களுக்கும் அப்பகுதி மக்கள் எப்போது மணி அடிக்க போகிறார்கள்? என்பதே இந்த வீடியோக்களை பார்க்கும் பக்தர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments