கொரோனா தொற்றுள்ளோருக்கு மூச்சிழுத்துவிட உதவும் செயற்கை சுவாசக் கருவி

0 3454

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் நன்றாக மூச்சு இழுத்து விடுவதற்கு, செயற்கை சுவாசக் கருவி மிகவும் தேவையானது.

கொரோனா வைரஸ் நுரையீரலையும் சுவாச உறுப்புகளையும் பாதித்தே ஆளைக் கொல்கிறது. இதனைத் தடுக்க கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 5 விழுக்காட்டினருக்கு நன்றாக மூச்சு இழுத்து விடுவதற்குச் செயற்கை சுவாசக் கருவி தேவையாகிறது.

இந்தக் கருவி நுரையீரலைச் சீர்கெடாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. நுரையீரலுக்குக் கூடுதல் ஆக்சிஜன் செல்வதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதுடன், ரத்தத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதையும் பராமரிக்கிறது.

மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருப்போர், அறுவைச் சிகிச்சை செய்யப்படுவோர், நுரையீரல் தொற்று ஏற்பட்டோர் ஆகியோருக்குச் செயற்கைச் சுவாசம் அளிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments