வெள்ளை மாளிகை அலுவலருக்கு கொரோனா

0 2080

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துணை அதிபர் மைக் பென்சின் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததாக வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் கேதி மில்லர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவருடன் அதிபர் டொனால்டு டிரம்புக்கோ, துணை அதிபர் மைக் பென்சுக்கோ நெருங்கிய தொடர்பு இல்லை எனவும் கேதி மில்லர் தெரிவித்தார். ஏற்கெனவே பிரேசில் தலைவர்களைச் சந்தித்த அதிபர் டொனால்டு டிரம்புக்குப் பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை எனத் தெரியவந்தது.

வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புக் குழுவின் தலைவரான மைக் பென்சுக்கு இன்னும் பரிசோதனை நடத்தப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments