பெட்ரோல் நிலையங்கள் நாளை திறந்திருக்குமா..?

0 15823

தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் நிலையங்கள் நாளை திறந்திருக்கும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இருப்பினும், அவசர மற்றும் நெருக்கடி சூழலில், தவிர்க்க இயலாத மற்றும் அவசியமான போக்குவரத்துக்கு மட்டும் எரிபொருள் சேவை வழங்க, மிகக்குறைந்த ஊழியர்களுடன் பெட்ரோல் நிலையங்கள் இயங்கும் என பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. காலை 7 மணிக்கும் முன்னும், இரவு 9 மணிக்குப் பிறகும் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments