தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 4657

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழகத்தில் சிறப்பான முறையில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, முதலமைச்சரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக, மாநில முதலமைச்சர்களுடன் காணொலிகாட்சி முறையில் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அப்போது அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுக்களை அப்போது பிரதமர் தெரிவித்தார்.

அதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், பிரதமர் அறிவித்த 9 அம்சங்களும் தமிழ்நாட்டில் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்ததாக, அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments