அமெரிக்க அரசால் போயிங் தேசியமயமாக்கம் செய்யப்படுமா..?

0 1305

கொரோனா தாக்கம், 737 மேக்ஸ் விமான விபத்துகளால் இழப்பை சந்தித்துள்ள போயிங் நிறுவனம், அமெரிக்க அரசால் தேசியமயமாக்கப்படுமா என கேள்வியெழுந்துள்ளது.

இரண்டு 737 மேக்ஸ் விமானங்கள் விபத்தில் சிக்கியதால் முதலில் இழப்பை சந்தித்த போயிங், கொரோனா பீதியால் பயணிகள் பயணத்தை குறைத்ததையடுத்து விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தாலும் பிரச்னையை எதிர்கொண்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய அமெரிக்க அரசிடம் சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாயை போயிங் கேட்டுள்ளதாகவும், இதையடுத்து போயிங்கை நிரந்தரமாக பிரச்னையில் இருந்து எப்படி மீட்பது என்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2008, 2009ம் ஆண்டுகளில் கிறிஸ்லர் (Chrysler), ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனங்கள் திவால் அறிவிப்பை வெளியிட்டதால், அதன் பங்குகளை அமெரிக்க அரசு வாங்கியது. அதுபோல போயிங் திவால் அறிவிப்பை வெளியிட்டு, அமெரிக்க அரசு அதன் பங்குகளை வாங்குமா என கேள்வியெழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments