ஒரு மாதம் இலவச இணைய சேவையை வழங்குகிறது BSNL

0 38971

வீட்டிலிருந்து பணி செய்வோரை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு மாதத்துக்கு இலவச பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதன் ஊழியர்கள் தங்களது வீடுகளிலிருந்தே பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்த முடிவெடுத்துள்ள பி.எஸ்.என்.எல்  நிறுவனம், புதிதாக பிராட்பேண்ட் சேவை பெறுபவர்கள் மற்றும் ஏற்கெனவே லேண்ட்லைன் சேவையை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு ஒரு மாதம் இலவச பிராட்பேண்ட் இணைய சேவை சலுகையை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு வராமல், செல்போனில் தொடர்பு கொண்டே இந்த சேவையை பெறமுடியும் எனவும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments