நாடு முழுவதும் சுமார் 1.12 லட்சம் பேருக்கு கண்காணிப்பு

0 2319

கொரானா பாதித்தவர்களோடு நேரடி தொடர்பில் இருந்த சுமார் 7 ஆயிரம் பேர் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனா பாதித்தவர்களின் சுற்றுப்புறங்களில் இருந்தவர்கள் என சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இதேபோல, கொரோனா தொற்றியவர்களின் சுற்றுப்புறத்தில் இருந்தவர்களும் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனா பாதித்தவர்களின் சுற்றுப்புறங்களில் இருந்தவர்கள் என சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

இதில், சுமார் 7 ஆயிரம் பேர், கொரானா பாதித்தவர்களோடு நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்பதால் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நேரடி மருத்துவ கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடயே, கொரோனாவை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்திருப்பதாக, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனையை தனியார் ஆய்வகங்களும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 18 மருத்துவ துறை நிறுவனங்களுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அரசுக்கு சொந்தமான 121 ஆய்வகங்கள், அவற்றின் மொத்த திறனில் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தும் அளவுக்குத்தான் இப்போது தேவை உள்ளது. இருப்பினும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான தயாரிப்பாகவே, தனியார் ஆய்வகங்களையும் ஈடுபடுத்துவதாக, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலை சேர்ந்த Dr RR Gangakhedkar தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments